வடமேல் மாகாணத்திலுள்ள ஒரேயொரு முஸ்லிம் மகளிர் பாடசாலையாகவும் தற்போது மூன்று மும்மொழிகளிலும் கல்வி கற்கும் மாணவர்களை கொண்டு இயங்கும் புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம் Fathima Balika Maha Vidyalaya- Puttalam. அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை இணைப்புகளின் (Amalgamation) பிரகாரம் போல்ஸ் வீதி அரசினர் ஆண்கள் பாடசாலை அமைந்திருந்த இடத்தில், அரசினர் பெண்கள் பாடசாலையாக 1962.02.01 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இன்று வரை அதே இடத்தில் இயங்கி வருகின்றது.
அதற்கு சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே புத்தளத்தில் முஸ்லிம் பெண்களுக்கென செட்டித் தெருவிலுள்ள (பைத்துல் முகந்தஸ் வீதி) தண்ணீர் தாங்கிக்கு அருகிலுள்ள காணியில் தனியானதொரு பாடசாலையாக இயங்கி வந்தது. அது மன்னர் வீதிக்கு மாற்றப்பட்ட போது அப்பாடசாலையின் உதவித் தலைமை ஆசிரியராகக் கடமை ஆற்றிய திருமதி சித்தி ஜெசிமா அகமடென் அவர்களே புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் முதலாவது அதிபராக கடமை ஏற்றார்.
அதிபரின் VIDEO தொகுப்பு - https://fb.watch/6SQyzAyKKU/
