பாடசாலைக் கீதம்
கலையோங்கி வளம் காண வழி அருளுவாய் இறைவா
நிலையாகி பாத்திமா வளர அருளுவாய் இறைவா
பார் புகழும் புத்தளத்தின் உயர்ந்த பீடமாய் சோர்வறியா புகழ் நிலைக்கும் கல்விக் கூடமாய்
நான் உயர்ந்திடவே
நீ அருள் புரிவாய்
ஏக நாயனே //
( கலையோங்கி )
அன்னை, தந்தை, ஆசான் புகழ் ஓங்கி வாழவே
அருங்கலையும் இறை நெறியும் சேர்ந்து சிறக்கவே
நான் உயர்ந்திடவே
நீ அருள் புரிவாய்
ஏக நாயனே //
( கலையோங்கி )
வளம் நிலவும் எழில் விளங்கும் எங்கள் நாட்டிலே
வளர் பிறை போல் கலை பலவும் சேர்ந்து சிறக்கவே
நான் உயர்ந்திடவே
நீ அருள் புரிவாய்
ஏக நாயனே //