

வடமேல் மாகாணத்திலுள்ள ஒரேயொரு முஸ்லிம் பெண்கள் பாடசாலை பாத்திமா மகளிர் மகா வித்யாலயம் 1962.02.01 ம் திகதி பத்து ஆசிரியர்களையும் இருநூறு மாணவர்களையும் தன்னகத்தே கொண்டு தனது பயணத்தை ஆரம்பித்தது. ஆரம்பப்பிரிவு, க.பொ.த. சாதாரணதரம், உயர்தரம் கலை மற்றும் வர்த்தகம் என வளர்ச்சி பெற்று 1979 காலப்பகுதியில் உயர்தர விஞ்ஞானப்பிரிவையும் ஆரம்பித்து வெற்றி கண்டது. 58 வருடங்களைத்தாண்டி வெற்றி நடை போடும் இப்பாடசாலை தற்போது தொண்ணூறுக்கு மேற்பட்ட ஆசான்களையும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகளையும் கொண்டு இயங்கும் புத்தளத்தின் மகளிருக்கான ஒரு முன்னோடி மும்மொழி பாடசாலையாகும்.