புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் வழிகாட்டலில் புத்தளம் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வரும் முன் காப்போம் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முதலாவது வேலைத்திட்டம் பாத்திமா மகளிர் கல்லூரியில் நேற்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் திருமதி எம்.எஸ்.எஸ். ரஜியா மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர் எம்.ஐ. ஹலீம்தீன் ஆகியோரின் வேண்டுகோளின், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றுதலோடு, நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
