Principal Message
FATHIMA BALIKA MAHA VIDYALAYA-PUTTALAM
வடமேல் மாகணத்தில் புத்தள மாவட்டத்தில் அமைந்துள்ள மும்மொழிப் பெண்கள் பாடசாலையான பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் இளம் சிறார்கள் பல்துறைகளிலும் கற்றுத் தேர்ந்து, வானளாவ உயர வேண்டும் என்ற நோக்கில் 1962.02.01ல் உருவாக்கப்பட்டது. தற்போது அதன் அதிபராக பணியாற்றுவதில் பெருமிதம் அடைகின்றேன்.
1962ல் பெண்கள் பாடசாலையாக துளிர் விட்ட பாத்திமா இன்று விருட்சமாகி வைர விழாவினை நோக்கி வீறுநடை போடுகின்றது.
தனது வரலாற்று பாதையில் பல துறைகள் விற்பன்னர்களை உருவாக்கியுள்ள,உருவாக்குகின்ற கலைக்கூடமாக இக் கல்லூரி விளங்குகின்றது.
கல்லூரியின் செயலற்பாடுகளிள் மாணவிகளின் திறன்கள்,கல்வி சார் வளர்ச்சி, இணைப்பாடவிதான செயற்பாடுகள்,ஆளுமைகள் வளர்க்கப்படுவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றன. பெண்கள் நாளைய சமூதாயத்தில் தனித்து தலை நிமிர்ந்து நின்று செயற்படும் ஆற்றல் அவர்களுக்குள்ளே உருவாக்கப்படுகிறது. எனவே பிள்ளைகளின் திறன்களை வளர்க்கும், ஊக்குவிக்கும் கலை கூடமாக எம் கல்லூரி விளங்குகின்றது. அதே போல் சாவால்கள் நிறைந்த சமூகத்தில்,அவற்றை சமாளித்து எதிர் கொள்ளும் ஆற்றல்களை வழங்குகின்றன.
பிள்ளைகளுக்கு சமூகத்துடனான உறவுகள் அவசியமானது. எனவே அது தொடர்பான பண்புகளும் ஊட்டி வளர்க்கப்படுகின்றன.எம் பாடசாலை சகல திறன்களும் கொண்ட மாணவர்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதில் நாம் பெருமிதம் அடைகின்றோம்.
எமது கல்லூரி மும் மொழிப் பாடசாலையாக இன,மொழி,மத வேறுபாடின்றி அனைவரையும் அரவணைத்து அவர்களின் கல்வி கலாசார சமூக தேவைகளை பூர்த்தி செய்வதனால் பாடசாலை சமூகம் அதனைச் சுற்றியுள்ள சமூகமும் பாடசாலையை மதிக்கின்றது. அதற்காக ஆசிரியர்கள், மாணவத் தலைவிகள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திக் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், நலன் விருந்தினர்கள், ஆசிரியர்கள், பிரமுகர்கள், சகலரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். தன்னலம் பாராத இவர்கள் ஒத்துழைப்பு மேலும் சிறக்க வாழ்த்துகின்றேன்.
ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் கல்வி முழுக் குடும்பத்திற்கும் கல்வி அளிப்பதற்கு சமமானது. எனவே ஒவ்வொரு பெண் பிள்ளையும் கல்வியினை கருத்துடன் கற்க வேண்டும். அதற்காக பாடுபடும் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.
பல தேவைகளுடன் இயங்கி வரும் எமது கல்லூரியின் தேவைகளை பூர்த்தி செய்து தர வசதி வாய்ப்புகள் உள்ள சமூகப் பற்றுள்ள அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
தேவைகள் நிறைவேறி மேலும் எமது கல்லூரி தழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
PRINCIPAL
M.S.S.RAJIYA (SLPS-1)