புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரிக்கு PCSUK அமைப்பு 100 பிளாஸ்டிக் கதிரைகளை அன்பளிப்பு செய்துள்ளது.
அமைப்பின் சார்பில் ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியை பின்தாரி சாபார் கல்லூரி அதிபர் ரஜிய்யா சபியுத்தீனிடம் அவற்றை கையளித்தார். இதன்போது பிரதி அதிபர்களான சரீனா அஜ்மல், மாஹிரா ஹமீத், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் நசீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.